சரத்பாபு மரணம் குறித்து பரவி வந்த வதந்தி?? அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த சகோதரி!!

0
சரத்பாபு மரணம் குறித்து பரவி வந்த வதந்தி?? அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த சகோதரி!!
சரத்பாபு மரணம் குறித்து பரவி வந்த வதந்தி?? அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த சகோதரி!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சரத்பாபு. தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக நடித்து வந்த இவர் கோலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு தவிர இன்னும் பல மொழி திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி திரையுலகில் 50 வருடங்களுக்கு மேலாக கலக்கி வரும் இவர் 200 மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நீயும் வேண்டாம்.., உன் நட்பும் வேண்டாம் – சமந்தாவை அசிங்கப்படுத்திய நாக சைதன்யா!

இதை தொடர்ந்து இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக இணையத்தில் செய்தி பரவி வந்தது. இந்த நேரத்தில் இவரது சகோதரி, சரத்பாபு அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் ஊட்டிய விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என கூறியுள்ளார். மேலும் இணையத்தில் இவர் குறித்து பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி, இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here