
நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் ஒரு கை பார்த்தது. அதன் பிறகு அஜித் யாரோட படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
லைகா நிறுவனம் தயாரிப்பதாக உறுதியான நிலையில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவருடைய கதை பிடிக்காததால் லைகா நிறுவனம், அந்த வாய்ப்பை மகிழ் திருமேனியிடம் கொடுத்தது. தற்போது இவர் அஜித்கேற்ப கதையை செதுக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்தனர்.
மேலும் ஹீரோயின், வில்லன் மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், ஒரு அப்டேட் லீக்காகியுள்ளது. அதாவது, நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் தளபதி விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.