31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப்…..,பிரப்சிம்ரன் அபாரம்….,

0
31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப்.....,பிரப்சிம்ரன் அபாரம்....,
31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப்.....,பிரப்சிம்ரன் அபாரம்....,

இன்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து, பஞ்சாப் அணி சார்பில் களமிறங்கிய பிரப்சிம்ரன் அதிரடியாக ஆடி 65 பந்துகளில் சதமடித்தார். அதே போல, சாம் கரண் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தில் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது.

ஜூன் 2 இல் நடிகர் ஆர்யாவின் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ்…..,ரசிகர்கள் எதிர்பார்ப்பு…..,

இதையடுத்து 168 என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி டேவிட் வார்னர் (54), பில் சால்ட், அமன் காசிம் கான் ஆகியோரது ஆட்டத்தின் மூலம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்தது. இதனால், 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபாரமான வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது டெல்லி அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here