
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடிக்க இவர்களுடன் பிரபு, பாக்யராஜ், நரேன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இயக்குனர் முத்தையா பாணியில், ஆக்ஷன் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியாகி மக்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
பாலிவுட் நடிகை தீபிகாவின் திருமண வாழ்க்கை ரகசியம்…..,இது மட்டும் இருந்தால் போதுமாம்…..,
இதையடுத்து, ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கிராமத்து பின்னணியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படமும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும்