“சூர்யகுமார் யாதவ் இத மட்டும் செஞ்சா போதும் இதிலும் அசத்துவார்”…, அட்வைஸ் கொடுத்த ஏபி டிவில்லியர்ஸ்!!

0
"சூர்யகுமார் யாதவ் இத மட்டும் செஞ்சா போதும் இதிலும் அசத்துவார்"..., அட்வைஸ் கொடுத்த ஏபி டிவில்லியர்ஸ்!!

ஐசிசி டி20 யின் நம்பர் 1. பேட்ஸ்மேனாக திகழும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், டி20 வடிவிலான போட்டிகளில் பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிப்பதால் 360 டிகிரி நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் இவர், ஒருநாள் வடிவிலான போட்டிகளில் மிகவும் தடுமாற்றம் அடைந்து வருகிறார். இருப்பினும் இவர் மீது நம்பிக்கை வைத்து, பிசிசிஐ ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவரை இணைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி நாயகன் என்று அழைக்கப்படும் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, “நான் சூர்யகுமார் யாதவின் தீவிர ரசிகன், நான் எப்படி விளையாடினேனோ அதே மாதிரியே அவர் விளையாடுகிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில், மட்டும் அவர் இன்னும் வேகம் காட்ட வேண்டும். அதைச் செய்வதற்கான அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது. நான் அவர் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

முகம் முழுவதும் பருக்களா? ஒரே வாரத்துல முகம் ஜொலிக்கணுமா? அப்போ இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here