மக்களே அலர்ட்.., இந்த இடங்களில் மட்டும் தான் விநாயகர் சிலை கரைக்க அனுமதி.., வெளியான அறிவிப்பு!!!!

0
மக்களே அலர்ட்.., இந்த இடங்களில் மட்டும் தான் விநாயகர் சிலை கரைக்க அனுமதி.., வெளியான அறிவிப்பு!!!!
மக்களே அலர்ட்.., இந்த இடங்களில் மட்டும் தான் விநாயகர் சிலை கரைக்க அனுமதி.., வெளியான அறிவிப்பு!!!!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி உற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை வைத்து தான் விநாயகர் சிலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு, கரைப்பதற்கும் சில கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சிலை உயரத்தினை 10 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது. ஒலிபெருக்கிகளை காலை, மாலை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த விநாயகர் சிலையை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய 4 இடங்களில் உள்ள ஆற்றுப்பகுதியில் மட்டும் தான் கரைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

முகம் முழுவதும் பருக்களா? ஒரே வாரத்துல முகம் ஜொலிக்கணுமா? அப்போ இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here