கொடைக்கானல் பேருந்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்!!!!

0
கொடைக்கானல் பேருந்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்!!!!
கொடைக்கானல் பேருந்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்!!!!

கொரோனா நோய் தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் தடை விதிக்கப்பட்டு மற்றும் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொற்றின் பரவல் குறைந்து இருப்பதால் இன்று முதல் பேருந்துகள் இயக்கவும் ஒரு சில தளர்வுகளுடனும் மக்கள் வெளியே சென்று வர அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு இந்நிலையில் சுற்றுலா தளங்களை திறக்காத நிலையில் கொடைக்கானல் பேருந்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தங்களது ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து மேலாளர் அறிவித்துள்ளார்.

கொடைக்கானல் பேருந்துகளில் ஆதார் அட்டை அவசியம்…

கொரோனா இரண்டாம் அலையினால் உயிர்சேதமும் பொருளாதார வீழ்ச்சியும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த இரண்டாம் அலையினால் கடந்த மே மாதம் முதல் நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இதனால் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் இருந்தனர் தேவைக்கு மட்டுமே வரவேண்டும் என்றும் வாகனகள் செல்ல பேருந்துகள் இயக்க தடை போடப்பட்டிருந்தது. இதனால் மக்கள் எங்கும் செல்ல முடியவில்லை சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன.கொரோன தாக்கம் மற்றும் நோய் பரவல் சற்று குறைந்து இருப்பதால் தமிழக அரசு ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீக்கியுள்ளது.

கொடைக்கானல் பேருந்துகளில் ஆதார் அட்டை அவசியம்...
கொடைக்கானல் பேருந்துகளில் ஆதார் அட்டை அவசியம்…

அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு இடையே இன்று முதல் பேருந்துகள் இயக்க அரசு உத்தரவிட்டது. இதில் சுற்றுலா தளமான கொடைக்கானல் குற்றாலம் செல்ல உள்ளுர் மக்கள் தவிர வேற யாரும் செல்ல அனுமதில்லை எனவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு இயங்கும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் அவர்களது ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். வெளியுர் பயணிகளை வருவதை தடுக்கவும் நோய் பரவலை தடுக்கவும் இந்த விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளியூர் மக்கள் கொடைக்கானல் வருவதற்கு இ பாஸ் அவசியம் எனவும் உள்ளூர் வாசிகள் தவிர வேற யாரும் வராமல் இருப்பதற்க்கே இந்த ஆதார் அட்டை கட்டாயம் என் போக்குவரத்துக்கு மேலாளார் இந்த அறிவிப்பாய் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here