உங்களுக்கு இந்த புடவை அழகா…! இல்ல இந்த புடவையால் நீங்க அழகா…! – வெளியான பாக்கியலட்சுமி மருமகளின் லேட்டஸ்ட் போட்டோ!!!

0

நடிகை திவ்யா கணேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி சீரியல்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் . இருப்பினும் தற்போது விஜய் டிவியில் மிக பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் மிகுந்த பிரபலம் ஆனார் என்றே சொல்லலாம். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் புடவையில் அழகு ததும்ப ததும்ப உள்ளார். இந்த போட்டோ அவரின் ரசிகர்களை கண்ணிமைக்க விடாமல் பார்க்க வைத்து உள்ளது.

சன் டிவியில் வெளியான ‘கேளடி கண்மணி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் தடம் பதித்தவர் நடிகை திவ்யா கணேஷ. இதை தொடர்ந்து பல்வேறு சீரியலில் நடித்து உள்ளார். இருப்பினும் தற்போது மிக விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  பாக்கியலட்சுமி என்னும் சீரியலில் ஜெனி கதாபாத்திரமே  இவருக்கு  நல்ல பெயரை தேடித்தந்தது. அந்த சீரியலில் அவர் மாமியாருக்கு பிடித்த மருமகளாக வளம் வருகிறார். வீட்டில் உள்ள அனைவருக்கும் செல்ல மருமகளாக தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதிலும் இடம் பிடித்து உள்ளார்.

இந்நிலையில் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. விதவிதமான ஆடையில் புகைப்படங்களை  எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதன் வகையில் தற்போது அழகிய புடவையில் பார்த்தாலே பத்திக்கும் அழகில், வெட்கத்தில் தலை சாய உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் உள்ளத்தை சிறகடிக்க வைத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here