பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான விஷால் தற்போது டாப்பு டக்கரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது
பாக்கியலட்சுமி எழில்
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஷால். எழிலாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
ஆரம்பத்தில் இந்த விஜய் டிவி வாய்ப்புக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளார். சின்ன சின்ன சேனலில் வேலை பார்த்து பல முறை ஆடிசனில் கலந்துகொண்டு தற்போது பாக்யலட்சுமி சீரியலில் வாய்ப்பை பெற்றார்.
தனது தேர்ந்த நடிப்பால் பலரது நெஞ்சங்களை கொள்ளைகொண்டார். இன்ஸ்டாவிலும் நாளுக்கு நாள் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றனர்.
இவரின் அழகின் ரகசியத்தையும் அவ்வப்போது வெளியிட்டு தான் வருகிறார். மேலும் ரீல்ஸ், போட்டோஸ் என ஆக்டிவாக தான் உள்ளார்.
தற்போது செம ஸ்டைலாக அவர் வெளியிட்டுருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் இளசுகள் எழில் போட்டோவை பார்த்து ஷேர் செய்தும் வருகின்றனர்.