நாளை முதல் நியாய விலை கடைகளில் 13 வகை மளிகை தொகுப்பு.. முதலமைச்சருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஆலோசனை!!!

0

தமிழகத்தில் உள்ள 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த 13 மளிகைப்பொருட்களின் தொகுப்பு நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். இதற்காக இன்று முதலமைச்சருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஏழை, எளிய மக்களுக்கு உதவ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கிலோ கோதுமை மாவு, உப்பு, ரவை; தலா, அரை கிலோ சர்க்கரை, உளுத்தம் பருப்பு; தலா, 250 கிராம் புளி, கடலை பருப்பு; தலா, 100 கிராம் கடுகு, சீரகம், மஞ்சள் துாள், மிளகாய் துாய்; டீ துாள், ஒரு குளியல் சோப்பு, ஒரு துணி துவைக்கும் சோப்பு  ஆகியவை அடங்கிய 13 வகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

 

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார். அத்துடன், கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டமும், நாளை துவக்கி வைக்கப்படுகிறது.

இந்த 13 வகை மளிகை பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உட்பட சில அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here