சென்னையில் மக்களை தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு மையம் – இன்று திறப்பு!!

0

தமிழகத்தில் சென்னை மாநகரத்தில் தான் மிக அதிகமான அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் தனிப்படுத்தப்படுபவர்களுக்கான சிறப்பு மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் கோரத்தாண்டவத்தால் நாளுக்கு நாள் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் தான் தினசரி பாதிப்பு மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. காரணம் சென்னையில் அனைத்து மாவட்ட மக்களும் வசித்து வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சென்னையில் மக்கள் தொகை மிக அதிகம். அங்கு பல குறுகிய தெருக்கள் உள்ளது. இதன் காரணமாகவே அங்கு கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது இதனை குறைக்கும் வகையில் சென்னையில் பரிசோதனை முகாம் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் சென்னையில் புதிய மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி இருக்கா??உடனே இத செய்யுங்க!!சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

அதன்படி சென்னை அண்ணா நகர் பகுதியில் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்த பின்பும் அவர்களை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவர்களை தங்கவைப்பதற்கான மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு தேவையான படுக்கை வசதி அனைத்தும் மிக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here