ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
கொல்கத்தா vs பெங்களூர்:
இந்தியாவில் தற்போது கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் 14வது ஐபிஎல் மெகா தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடுகின்றன. இந்த தொடரில் பெங்களூர் அணிகள் தொடர்ந்து தனது அதிரடியை வெளிப்படுத்தி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது விளையாடுவது போல் இந்த அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றுவதற்கான அனைத்து வாய்ப்பும் உள்ளது. அதேபோல் இயான் மோர்கன் தலைமையில் களமிறங்கியுள்ள கொல்கத்தா அணி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த அணி இதுவரை 7 போட்டிகளை விளையாடியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
அதில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த அணி தற்போது அதிரடியான கம்பேக்கை கொடுத்தால் மட்டுமே காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்து கொள்ளும். இந்த இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் கொல்கத்தா அணி 14 முறையும் பெங்களூர் அணி 13 முறையும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.