சுவை அள்ளும் ‘இறால் தொக்கு’ ரெசிபி – ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

0
Prawn Thokku

கடல் உணவுகள் என்றாலே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் இறாலை வைத்து டேஸ்டியான ‘இறால் தொக்கு’ எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் – 100 கி
  • தக்காளி – 3
  • இறால் – 1/2 கிலோ
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். எப்பொழுதுமே அசைவ உணவுகளை கழுவும் போது அதில் மஞ்சள்தூள் சேர்த்து கழுவுவதால் கிருமிகள் அழியும். இப்பொழுது கழுவி எடுத்துக்கொண்ட இறாலை ஒரு பௌலில் போட்டு எடுத்து கொள்ளவும். அதன் பிறகு கடாயை அடுப்பில் வைத்து அதில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஓரளவிற்கு நன்கு வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து கொண்டால் தக்காளியும் வெங்காயமும் சீக்கிரமாக வதங்கும். அதன் பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து அடிபிடிக்கலாமல் வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பாகுபலி அனுஷ்காவிற்கு விரைவில் டும் டும் டும் – மாப்பிள்ளை யார் தெரியுமா??

ஓரளவிற்கு தண்ணீர் சுண்டி வந்ததும் அதில் இறாலை சேர்த்து கிளறவும். இறால் வேகுவதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே போதுமானது. எனவே தான் தண்ணீர் ஊற்றி சுண்டியதும் அதில் இறாலை சேர்க்கிறோம். இப்பொழுது கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவை அள்ளும் ‘இறால் தொக்கு’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here