பாகுபலி அனுஷ்காவிற்கு விரைவில் டும் டும் டும் – மாப்பிள்ளை யார் தெரியுமா??

0

தமிழ், தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்தை பற்றிய செய்திகள் தற்போது பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனுஷ்கா 

யோகா டீச்சராக தனது கேரியரை ஆரம்பித்தவர் தான் அனுஷ்கா. நாகார்ஜுனா தான் இவரை முதன்முதலில் சினிமாவில் அறிமுகம் செய்தது. முதல் படமே இவருக்கு தெலுங்கில் தான் அமைத்தது. அதன் பிறகு தமிழில் ‘இரண்டு’ என்ற படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தார்.

அப்படியே இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் உடன் ‘வேட்டைக்காரன்’ படத்தில் இணைந்தார். அடுத்தடுத்து சிங்கம் படங்களில் 3 பாகம் வரை ஹீரோயினாகவே நடித்திருந்தார். இப்படி தமிழ், தெலுங்கு என பிஸியாகவே இருந்து வந்தார்.

‘பாக்கியலட்சுமி அம்மாவுடன் மகன் செய்யும் காரியத்தை பாருங்களேன்’ – ட்ரெண்டாகும் வீடியோ!!

அவருக்கு ‘பாகுபலி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பிரபாஸை விட தேவசேனா கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பின்னர் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி மக்களுக்கு பிடித்து போகவே அவர்கள் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்ற வதந்தியும் பரவி வந்தது.

ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால் மறுபடியும் அனுஷ்கா திருமணத்தை பற்றி செய்தி உலா வருகிறது. அதாவது துபாயில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறாராம். அதன் பிறகு துபாயில் தான் செட்டில் ஆக போகிறாராம். இந்த செய்தியை கேட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here