‘நானும் புகழ் அண்ணாவும் இப்படி தான் இருந்தோம், கடைசி இப்படி ஆகிடுச்சு’ – குக் வித் கோமாளி செட்டில் கண்கலங்கி ஷிவாங்கி!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்த ஷிவாங்கி தற்போது குக் வித் கோமாளி செட்டில் நடந்த சுவாரசிய நிகழ்வுகளை பற்றி சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர்.

குக் வித் கோமாளி ஷிவாங்கி

விஜய் டிவியில் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு கொண்டு போக முடியுமா என்று கேட்டால் அது யூகிக்க முடியாத ஒன்று தான். அதனை தான் விஜய் டிவி செய்து சாதித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் பெரிய தூண்கள் என்றால் அது புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி தான்.

சுவை அள்ளும் ‘இறால் தொக்கு’ ரெசிபி – ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

ஷிவாங்கி தனது குழந்தை தனமான செயலால் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். புகழை பற்றி சொல்லவே வேண்டாம். அடுத்த வடிவேலு அவர் என்கிற அளவுக்கு பேசிகொண்டுள்ளனர். பாலா அவரின் கவுண்டருக்கு எல்லையே கிடையாது. இப்படி அனைவரை பற்றியும் சொல்லிக்கொண்டே செல்லலாம். இப்படி இருக்க தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்து விட்டது பலரையும் சோகமாக்கியுள்ளது. அடுத்த சீசன் வரை காத்திருக்க வேண்டுமா?? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஷிவாங்கி, புகழ் இதில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தியும் இணையத்தில் உலா வருகிறது. தற்போது ஷிவாங்கி குக் வித் கோமாளி செட்டில் தனது நினைவுகளை பகிர்ந்து வருகிறார். கூடவே ஷாம் விஷாலும் இருக்க எங்கு எங்கு கேமரா இருக்கும், நானும் புகழ் அண்ணாவும் செய்யும் சேட்டை என அனைத்தையும் கூறியுள்ளார். இதனை கேட்ட பலரும் கண்கலங்கியுள்ளனர். ஷிவாங்கிக்கே என்னவோ போல தான் ஆகி விட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here