குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கியின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு கோமாளியுடன் கியூட் போஸ் கொடுத்திருக்கும் ஷிவாங்கிக்கு லைக்ஸ் அள்ளியுள்ளது.
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரது ஸ்ட்ரெஸை போக்கி வருகிறது என்றே சொல்லலாம். வாராவாரம் புது கான்செப்டுடன் மக்களை மகிழ்வித்து வருகிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். முக்கியமாக அந்த 4 கோமாளிகள் தான் மக்கள் மனதை வெகுவாக கொள்ளைக்கொண்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
புகழ், ஷிவாங்கி, மணிமேகலை மற்றும் பாலா போன்றோருக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. முக்கியமாக குழந்தை தனமான செய்கையால் ஷிவாங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார். 21 வயது ஆகியும் தனது சேட்டைகளாலேயே மக்களை கவர்ந்தார். எந்த பக்கம் திரும்பினாலும் குக் வித் கோமாளிகள் டாக் தான். மேலும் இவர்களின் சிறு வயது புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தனுஷின் மூன்றாவது ஹிந்தி பட படப்பிடிப்பு நிறைவு – ரிலீஸ் தேதிக்காக ஆவலில் ரசிகர்கள்!!
தற்போது ஷிவங்கியும் கியூடான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு கோமாளியுடன் அமர்ந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே ஷிவாங்கி அஸ்வின் பற்றிய பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வின் எங்கு சென்றாலும் சரி, ஷிவாங்கி எங்கே என்று கேட்பது, அதே போல ஷிவாங்கி எங்கே சென்றாலும் அஸ்வின் எங்கே என்று கேட்பது. இதே தான் தற்போது ட்ரெண்ட். அப்படி இருக்க ஷிவாங்கியின் சிறு வயது போட்டோ கிடைத்தால் விடுவார்களா?? அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.