நடிகை ராஷ்மிகா மந்தனா சமீப காலமாக தெலுங்கு திரையுலகின் சென்சேஷனல் நடிகையாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் வெளியான ராஷ்மிகா மந்தனாவின் சிறிய வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா
மிக குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமாவில் உயர்ந்த இடத்தை அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமா பின்புலம் இல்லாத, 24 வயதே ஆன நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர்கள் தங்களது ஏக ஆதரவை கொடுத்தனர். இந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கமிட்டானார் ராஷ்மிகா மந்தனா.
அந்த வகையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. இத்திரைப்படம் தென் இந்திய ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனாவை அடையாளம் காட்டி தந்தது. பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இந்த ஒரு திரைப்படத்திலேயே ஏகப்பட்ட புகழுக்கும், பெயருக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரானார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
பாரதி கண்ணம்மாவில் கலந்துக்கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள் – ட்ரெண்டாகும் ப்ரோமோ!!
விரைவில் திரைக்கு வரவுள்ள ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. முன்னதாக கன்னட திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தமும் நடந்தது.
பின்னர் இருவருக்குமிடையே உள்ள சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த திருமணம் நிறுத்தப்பட்டது. தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் சிறிய வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.