மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா?? மத்திய அமைச்சர் விளக்கம்!!

0
lock down

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு 40,000 தாண்டி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு ஏற்பட வாய்ப்புள்ளதா என்று மக்கள் அனைவரும் அச்சமடைந்த வருகின்றனர்.

இந்தியா:

இந்தியாவில் கடந்த 110 நாட்களில் இல்லாத அளவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 46,952 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை என்னதான் அறிவுரை கூறினாலும் அதனை மக்கள் அலட்சியமாக எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தான் தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டவது அலைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணம் என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில், அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. மேலும் இந்த ஐந்து மாநிலங்களில் இந்த கொரோனா காலத்தில் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேர்தல் அதிகாரிகள் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

nithin gadkari

இப்படி பண்ணா எங்கிருந்து கொரோனா குறையும்?? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

கொரோனா பரவல் தற்போது இந்திய மக்களிடம் மீண்டும் நமது நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே மஹாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here