வித்தியாசமான சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான், நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் சுரேஷின் மகள் ஆவார். இவர் முதன் முதலாக தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் இருந்து அவருக்கு பல ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

பாரதி கண்ணம்மாவில் கலந்துக்கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள் – ட்ரெண்டாகும் ப்ரோமோ!!

காரணம், இவரது இயல்பான நடிப்பு மற்றும் குறும்பான பேச்சு ஆகியவையே காரணம். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து விட்டார். ஆனால், அத்தனை திரைப்படங்களிலும் இவருக்கு எப்போதும் போலவே ஹீரோயினிக்கு வழங்கப்படும் கதாபாத்திரம் மற்றும் முக்கியத்துவம் தான் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கீர்த்தி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்த படமான “மகாநதி” திரைப்படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் இவர் இந்த திரைப்படத்திற்கு நடிக்க இருந்த போது அனைவரும் கிண்டல் செய்தனராம். ஆனாலும், தன் மேல் கொண்ட நம்பிக்கையின் காரணமாக தான் இவர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவரது சினிமா வாழ்வில் முக்கியமான படமாக மாறிவிட்டது.

இந்த திரைப்படத்திருக்காக கீர்த்தி மிகவும் மெனக்கிட்டு தான் நடித்தாராம். தற்போது தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி இந்த பொது முடக்கத்தின் போது தனது உடல் எடையினை அடையாளம் தெரியபடி குறைத்துவிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் நொந்து போய் கீர்த்தியை உடல் எடையினை குறைக்க அறிவுறுத்தினர். தற்போது ஒரு நிகழ்ச்சிக்காக பங்கேற்க வந்த கீர்த்தியை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். காரணம், அந்த அளவிற்கு உடல் எடையினை குறைத்து வித்தியாமாக காட்சி அளித்துள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here