தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல எச்சரிக்கை ஏதும் உள்ளதா என்பதையும் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் மற்றும் கீழடுக்கில் கிழக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் வருகிற 20.02.2021ம் தேதி அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். மேலும் தமிழகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடத்தில் கன மழை பெய்யும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் வருகிற 21.02.2021ம் தேதி அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடத்தில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதேபோல் வருகிற 22.02.2021ம் தேதி அன்று தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வருகிற 23.02.2021 முதல் 24.02.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 30 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நடிகை சித்ராவின் ‘கால்ஸ்’ படத்தின் காமன் டிபி – புகைப்படத்தை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!
அதிகபட்ச வெப்பநிலையாக 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோத்தகிரி 9 செமி, குன்னூர் 7 செமி, சேத்துப்பாறை 6 செமி, அலகாரி எஸ்டேட் 5 செமி, தண்டாரம்பேட்டை, மே மாத்தூர் தலா 4 செமி, தழுத்தலை 3 செமி மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.