Sunday, May 19, 2024

புத்தாண்டு பரிசாக 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு பென்ஷன், வீட்டு வசதி – மாநில அரசு முடிவு!!

Must Read

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்த நபர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு சார்பில் பென்ஷன், வீட்டு வசதி மற்றும் மருத்துவ வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதி திட்டத்தின் கீழ் 20 லட்சம் ஊழியர்களை இணைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்:

எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ எனப்படுவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் ஆகும். இந்த திட்டம் மக்களுக்கு 100 நாட்கள் உறுதியான வேலைவாய்ப்பினை வழங்குகின்றது. இந்த பொது முடக்கத்தின் போது மட்டும் இந்த வேலை திட்டத்தில் இணைந்தவர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு புத்தாண்டு பரிசாக 17 திட்டங்களின் நன்மைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டர் பால் நம்பர இன்னும் வச்சிருக்கியா?? வனிதாவிடம் சரமாரியான கேள்விகளை கேட்ட உமாரியாஸ்!!

அதேபோல் இந்த திட்டத்தில் ஆண்டின் இறுதிக்குள் 20 லட்சம் தொழிலாளர்களை தொழிலாளர் துறையுடன் பதிவு செய்ய ஊரக வளர்ச்சி துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உத்தர பிரதேச அரசு சீரிய முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து அந்த மாநிலத்தின் 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கான கூடுதல் ஆணையர் யோகேஷ் குமார் கூறுகையில், “இந்த திட்டம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதற்கு காரணம், முதல்வர் யோகி ஆதித்யநாத் முயற்சிகளே ஆகும். இந்த ஆண்டு மட்டும் 1.4 கோடி பேர் இந்த திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளனர். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 2 கோடியாக மாறும் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்தியாவில் அதிகபட்ச வேலைவாய்ப்பினை நல்கும் மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதல் இடத்தில் வந்து விடும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -