டிசம்பர் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0

ஹெத்தை அம்மன் திருவிழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 30 ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் உள்ள அட்டி என அழைக்கப்படும் கிராமங்களில் வாழும் படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி வருடம் தோறும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்களது குலதெய்வமான ஹெத்தை அம்மனுக்கு விழா எடுத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா 28ம் தேதி துவங்கவுள்ள நிலையில் வரும் 30ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், நீலகிரியில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் ஆகியவை அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2021இல் இருந்து கட்டண சேவையை தொடங்கும் ‘டெலிகிராம்’ !!

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவுக்கு, கடந்த 2012 ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்சியில் தான் முதன்முதலாக உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து வருடம் தோறும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here