2021இல் இருந்து கட்டண சேவையை தொடங்கும் ‘டெலிகிராம்’ – பயனர்கள் அதிர்ச்சி!!

0

2021 புது ஆண்டில் இருந்து டெலிகிராம் செயலியில் கட்டண சேவை தொடங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது டெலிகிராம் பயனாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

டெலிகிராம்:

தற்போது டெலிகிராம் செயலி அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இது வாட்ஸ் ஆப்பை போல தகவலை பரிமாறிக் கொள்வதற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சினிமா படங்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதற்கும் பயன்படுகிறது. தற்போது டெலிகிராம் நிறுவனம் 500 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்களை நெருங்கவுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஓர் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வரும் 2021ம் ஆண்டு முதல் டெலிகிராம் செயலி கட்டணமயமாக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் டெலிகிராம் நிறுவனத்தின் இணை இயக்குனரான பாவல் துரோவ் கூறியதாவது, தற்போது வளர்ந்து வரும் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி தேவைப்படுகிறது. மேலும் 2021 ஆண்டு முதல் டெலிகிராம் நிறுவனம் கட்டண சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக பிசினெஸ் மற்றும் பவர் பயனாளர்களுக்கு பிரீமியம் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

வலை பயிற்சியில் மீண்டும் ரஹானே & புஜாராவை காலி செய்த நடராஜன்!!

ஆனால் தற்போது இருக்கின்ற வசதிகள் அனைத்தும் இலவசமாக இருக்கும். பிரீமியம் பயன்படுத்துபவர்களுக்கு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும். அதன் பின் இரண்டாம் கட்டமாக பப்ளிக் சேனல்களில் விளம்பரம் அறிமுகப்படுத்தப்படும். பப்ளிக் சேனல் என்றால் இதனை ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவாகவோ சேர்ந்து நடத்துவர். இந்த சேனல்லில் யார் வேண்டுமானாலும் இணையும் வசதி இருக்கும்.ஆனால் பிரைவேட் சேனல்களில் எந்த விளம்பரமும் இருக்காது என்று அறிவித்துள்ளார்.

மேலும் அவர் டெலிகிராம் நிறுவனம் பணத்திற்காக விற்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார். அவர் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை சுட்டிக்காட்டி உள்ளார். அதாவது வாட்ஸ் ஆப் நிறுவனம் தன் லாபத்தை முன்னிறுத்தி பேஸ்புக் நிறுவனத்திடம் விற்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here