பீட்டர் பால் நம்பர இன்னும் வச்சிருக்கியா?? வனிதாவிடம் சரமாரியான கேள்விகளை கேட்ட உமாரியாஸ்!!

0

சமூக வலைத்தளங்களில் இப்பொழுதெலாம் அதிகமாக அடிபடும் பெயர் என்றால் அது வனிதா தான். வனிதா என்று சொன்னாலே அது சின்ன விஷயமாக இருந்தாலும் காட்டுத்தீ போல பரவி விடுகிறது. இந்நிலையில் வனிதாவும், உமாரியாஸ் அவர்களும் இணைந்து எடுத்த வீடீயோவின் பார்ட் 2 வை வெளியிட்டுள்ளனர்.

வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா. தனது அடாவடி பேச்சாலும், நடவடிக்கையாலும் பல சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் சில நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டும் வெளியேறினார். அதன் பிறகு விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு யூடுப் சேனல் ஆரம்பித்து தனது சமையல் கலையை காட்டினார். இப்படி மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் சமயத்தில் திடீரென பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பல சர்ச்சைகளை கிளப்பியது. அந்த திருமண வாழ்க்கையும் 6 மாதம் கூட நிலைக்கவில்லை. இப்பொழுது சோசியல் மீடியா என்றாலே அதில் முக்கால்வாசி நியூஸ் வனிதாவை பற்றியது தான். சில நாட்களுக்கு முன்பாக வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் மறுபடியும் காதலில் விழுந்ததாக போஸ்ட் போட்டிருந்தார்.

ரஜினிகாந்திற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை !!

இதனை பார்த்த பலருக்கும் மறுபடியும் முதலில் இருந்தா?? என ஷாக். ஆனால் அடுத்து தான் அது உமாரியாஸ் பிறந்தநாளில் உமாவும், வனிதாவும் அவுட்டிங் போயுள்ளனர். அதில் Truth or Dare கேம் விளையாண்டுள்ளனர். அப்பொழுது போடப்பட்டது தான் இந்த போஸ்ட். மேலும் இந்த வீடீயோவின் முதல் பாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

தற்போது 2வது பாகம் வெளியாகியுள்ளது. அதில் பீட்டர் பால் காண்டாக்ட் இன்னும் வச்சு இருக்கியா?? என உமா கேட்கிறார். அதற்கு வனிதாவும் கூலாக பதில் சொல்கிறார். அதாவது பீட்டர் பால் போன், பர்ஸ், அடையாள அட்டை அனைத்தும் தொலைந்துபோய் விட்டதாம். அதனால் அப்பொழுதே டெலீட் செய்து விட்டாராம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here