Sunday, May 5, 2024

600 காமுகர்களுக்கு 16 வயது சிறுமியை இரையாக்கிய பெண்கள் – போலீசார் அதிரடி கைது!!

Must Read

16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக 5 பெண் முகவர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் அந்த சிறிய பெண்ணை 600 பேர் வயது வித்தியாசமின்றி பாலியல் பலாத்காரம் செய்ய இந்த 5 பெண்களும் உதவி உள்ளனர்.

பெண்ணை ஏமாற்றிய உறவினர்:

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஒரு சிறுமி தனது 10 வயதில் பெற்றோர்களை இழந்துள்ளார். இதனை அடுத்து அவரை ஜெயலட்சுமி என்ற உறவினர் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். அவர் ஒரு பாலியல் தொழிலாளி. சிறுமி 13 வயதில் பூப்படைந்ததும் அவரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். தான் ஈடுபடுத்தியது மட்டும் அல்லாமல் தனது தோழிகளுக்கும் சிறுமியை அறிமுகப்படுத்தி பாலியல் தொழிலில் இறங்க வைத்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவரது தோழிகளான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம் ஆகியோர் அந்த சிறுமியை மதுரை மட்டும் அல்லாமல் பல மாநிலங்களில் பல காமுகர்களுக்கு இரை ஆக்கியுள்ளனர். இவர்களை பிடிக்க வேண்டும் என்று ஆட்கடத்தல் மற்றும் பாலியல் தொழில் தடுப்பு காவல்துறையினர் தீவிரமாக இருந்து வந்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்கள் தப்பித்து வந்துள்ளனர். இப்படியான நிலையில் காவல்துறையினருக்கு சிறுமியை துன்பப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மதுரை விஐபி நகரை அடைந்த போலீசார் சிறுமி உட்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி – ராகுல் காந்தி கைது!!

இவர்கள் அனைவரையும் விசாரித்ததில் அந்த சிறுமியை 11 வயதில் இருந்து இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அதே போல் பல மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை 600 பேருக்கு சிறுமியை இரையாக்கி உள்ளனர். சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமிக்கு பண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -