சியோமி ஸ்மார்ட்போனின் ரசிகரான ஒருவர் தனது த்விட்டேர் பக்கத்தில் Mi 10 T PRO ஸ்மார்ட்போன் வாங்கினால் தான் திருமணம் செய்வேன் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு சியோமி நிறுவனம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
சியோமி:
இந்த உலகில் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது விசித்திரமான அல்லது அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கிறது. சில விஷயங்கள் நகைச்சுவையாகவும், சில நம்மை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகளாகவும் உள்ளது. இவை அனைத்துமே சமூக வலைத்தளங்கள் மூலம் அனைவராலும் கண்டறியப்படுகிறது. தற்போது இதே போல் சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சமீபத்தில் தான் தங்களது புதிய மாடல் போனான Mi 10 T PROவை அறிமுகம் செய்தது. சியோமி ஸ்மார்ட்போனின் ரசிகன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் Mi 10 T PRO ஸ்மார்ட்போனை வாங்கினால் தான் திருமணம் செய்து கொள்ள்வேன் என்று ட்வீட் செய்துள்ளார். அவர் விளையாட்டாக செய்த செயல் இப்பொது அனைவராலும் ஆச்சர்யப்படும் அளவிற்கு மாறிவிட்டது.
அமேசானில் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை – இந்த 6 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி ஆபர்!!
இதனை பார்த்த சியோமி நிறுவனம் அவருக்கு பிடித்த மாடலான Mi 10 T PRO ஸ்மார்ட்போனை பரிசாக வழங்கி இப்பொது நீங்கள் திருமணத்திற்கு தயார் என்று நகைச்சுவையாக கூறியுள்ளது. இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது.