புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் சாத்தியமா??

0

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றபட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தின சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க உள்ளது குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தினவிழா:

2021 ஜனவரி மாதம் 26ம் தேதி 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இம்முறை சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சானை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக அழைத்து விழாவில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையினை அந்நாட்டு பிரதமர் ஜான்சன் ஏற்று கொண்டு விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்தார். இதனை அடுத்து இதற்கு கைமாறாக நடக்கவிருக்கும் G7 மாநாட்டில் மோடி பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து கொரோனா பரவலுக்கு பின் இந்தியாவில் வரவிருக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் இவர் என்ற பெருமை சேர இருந்தது. இப்படியான நிலையில் சமீப நாட்களாக இங்கிலாந்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் மூலமாக நோய் பரவல் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் கடுமையான பொது முடக்க விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இனி வாரம் ஒருமுறை LPG சிலிண்டரின் விலை மாறும் !!

Boris Johnson
Boris Johnson

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் இந்தியாவிற்கு வருவது உறுதியா?? என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து நடவிருக்கும் குடியரசு தின விழாவிற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் யார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here