ஜனவரியில் வெளிவரும் 108 எம்பி கேமரா மொபைல் – சியோமி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

0

சியோமி நிறுவனத்தின் புதிய மாடல் ஆன MI 10 ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் வெளிவரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அது 108 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சியோமி:

சியோமி நிறுவனம் தனது புது மாடல் ஸ்மார்ட்போனான MI 10ஐ வரும், ஜனவரி மாதம் 5 ஆம் தேதி அன்று வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் அந்நிறுவனம் 108MP கேமராவை கொண்ட ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த சியோமி 10 i ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் வெளியான ரெட்மி நோட் 9 ப்ரோ 5 ஜி இன் மறு பெயரிடப்பட்ட பாதிப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு முன் வெளியான தகவலின் படி, சியோமி 10 ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் 128கிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்று 2 விதமாக உள்ளது. மேலும் இது கருப்பு, ஆரஞ்சு, நீலம் மற்றும் பச்சை நிறங்களை உடையது. சியோமி மி 10i ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் அளவிலான் புல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 33W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் செயல்படும்.

5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை – சாதனை படைத்த ஐபோன்!!

கேமராக்களை பொறுத்தவரை, இது 108 எம்.பி மெயின் கேமராவுடன் வரும். மற்ற சென்சார்களை பொறுத்தவரை 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டிருக்கலாம். இதில் உள்ள செலபி கேமரா ஒரு 16 மெகாபிக்சல் இன்-டிஸ்ப்ளே செல்பீ ஷூட்டர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here