இந்தியாவில் பரவியதா புதிய வகை கொரோனா வைரஸ்?? நிதி ஆயோக் விளக்கம்!!

0

இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவவில்லை என்று நிதி ஆயோக்கின் உறுப்பினரான மருத்துவர் வி.கே பால் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் வீணாக அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

புதிய வகை வைரஸ்:

இங்கிலாந்தில் தற்போது மக்கள் அனைவரும் அச்சம் அடையும் வண்ணம் புதிதாக ஒரு வகை கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதனால் அங்கு கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இப்படியான நிலையில் அங்கு இருந்து உலக நாடுகளுக்கு இந்த புதிய வகை வைரஸ் பரவி விடக் கூடாது என்பதற்காக அனைத்து அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் அங்கு இருந்து வரும் விமானங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று இங்கிலாந்தில் இருந்து விமானம் வழியாக வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மக்கள் அனைவரும் குழப்பமும் அடைந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நிதி ஆயோக்கின் மருத்துவர் வி.கே பால் நிருபர்களிடம் இது குறித்து பேசினார். அவர் சில விஷயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

அன்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா – 36 பேருக்கு பாதிப்பு!!

அவர் கூறியதாவது, “உருமாற்றம் அடைந்து தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவவில்லை. இந்தியாவில் நோய் பாதிப்போ அல்லது இறப்பவர்களின் எண்ணிக்கையோ அதிகரிக்கவில்லை. இதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இன்று காலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக வந்த 199 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் நெகடிவ் என்றே வந்துள்ளது. அதனால் மக்கள் வீணாக எதனையும் நினைத்து கவலை கொள்ள வேண்டாம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here