Monday, May 20, 2024

மின்துண்டிப்பா?? அப்போ ரூ.1 லட்சம் இழப்பீடு – புதிய மின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள்!!

Must Read

தேவையற்ற மின்துண்டிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மின் விநியோக கழகங்கள் நுகர்வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேவையில்லாத மின்வெட்டு:

நாட்டில் நிலவும் தேவையற்ற மின் வெட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகள் மட்டுமன்றி, சிறு குறு தொழில்களும், விவசாயமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பலவித வேண்டுகோள்களுக்கு பிறகும், சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமலே இருந்து வந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் மின் உபயோக விதிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை முதன் முதலாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில் “தேவையற்ற மின்வெட்டில் ஈடுபடும் மின் விநியோக நிறுவனங்களும், மின் வாரியமும், நுகர்வோருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், புதிய மின் மீட்டர், மின் இணைப்பு ஆகியவற்றையும் இலவசமாக வழங்கவேண்டுமென” தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை துறையாக அங்கீகாரம்:

தபால் துறை , ரயில்வே துறை ஆகிய துறைகளை போலவே தற்போது மின் விநியோக துறையும், இந்திய வரலாற்றில் முதன் முறையாக சேவை துறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநில அரசின் சர்வாதிகார அமைப்பாக செயல்பட்டு வந்த மின் பகிர்மான துறை தற்போது தாங்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு ஏற்ற சேவையினை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பிரபல தமிழ் விளையாட்டு வர்ணனையாளர் ஜப்பார் மரணம் – ரசிகர்கள் வருத்தம்!!

மேலும் ஆன்லைன் மூலமாக, புதிய மின்னிணைப்பு வசதியை வீட்டிலிருந்தே எளிதாக பெரும் வகையில் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணைய சேவை ஏற்பாடுகளை செய்வதற்கு 6 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டண கால கட்டத்தை (பில்லிங் சைக்கிள்) அறுபது நாட்களுக்கு மேல் நீட்டித்தல், நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் தள்ளுபடி வழங்க வேண்டுமென்பதும் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மின் பாதுகாப்பு சட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது .

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -