Tuesday, May 7, 2024

அண்ணா பல்கலையில் வேகமெடுக்கும் கொரோனா – தள்ளிப்போகும் வகுப்புகள்?? மாணவர்கள் அதிர்ச்சி!!

Must Read

சென்னையில் உள்ள ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கும், விடுதியில் உள்ள மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்த அறிக்கையை உயர்கல்வித்துறை கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா:

சென்னையில் ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அனைவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் விடுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட 4 குழுவினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வகுப்புகள் தள்ளிபோகுமா?

ஒவ்வொரு குழுவினரும் தனித்தனியாக சென்று விடுதியில் உள்ள மாணவ, மாணவியருக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விவகாரம் குறித்து தற்போது உயர்கல்வித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் – மூன்றடுக்கு பொது முடக்கம் அமல்!!

இந்த பரிசோதனைகள் காரணமாக வகுப்புகள் தள்ளிப்போக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SSC, Railway, Bank ஆகிய தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த பயிற்சி இருந்தா போதும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

SSC, Railway, Bank ஆகிய தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த பயிற்சி இருந்தா போதும்? யூஸ் பண்ணிக்கோங்க!!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு துறைகளில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -