Sunday, May 5, 2024

பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – பாகிஸ்தான் அரசு அதிரடி!!

Must Read

பாகிஸ்தானில் அதிதீவிர பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இது நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் கொடுமை – ஆண்மை நீக்கம்:

கடந்த செப்டம்பர் மாதம் தனது பிள்ளைகளுடன் காரில் சென்ற பெண்ணின் கார் பழுதடைந்ததால் நின்று கொண்டிருந்தது, அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அந்த பெண்ணை அவரது பிள்ளைகள் முன்பே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது. ஆறு வயது சிறுமியை உள்ளூர் நபர் பாலியல் வன்கொடுமை உள்ளாக்கி படுகொலை செய்தார். இந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானில் பாலியல் குற்ற வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாலியல் குற்ற வழக்கு தொடர்பாக அரசும் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாகிஸ்தான் பாலியல் சட்டத்தின்படி பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவது, ஆசைக்கு இணங்காதபோது வற்புறுத்தி பாலியல் செய்வது, உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்து பாலியலில் ஈடுபடுவது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது போன்றவை சட்டவிரோதமாக கருதப்பட்டு, குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.

அவசரச்சட்டம் அமல்:

பாலியல் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கு ஏற்றார் போல் அவசர சட்டத்திற்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளித்தது. அந்த அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

மீண்டும் தடாலடியாக உயர்ந்த தங்க விலை – இன்றைய விலை நிலவரம்!!

அவசர சட்டத்தின் படி, பாலியல் குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் 4 மாதங்களில் விசாரணையை முடிக்கவும் வேண்டும். மேலும், ரசாயனம் மூலம் அதிதீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரின் ஆண்மையை நீக்க வேண்டும். 120 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்டி இந்த அவசர சட்டத்தை முறையான சட்ட மசோதா மூலம் சட்டமாக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகின் சில நாடுகளில் இந்த ரசாயன ஆண்மை நீக்க நடவடிக்கை நடைமுறையில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டில் இந்தோனீசியாவில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன ஆண்மை நீக்கத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டில் போலாந்தில் சிறார் பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -