பிக் பாஸ் வீட்டின் இந்த வார லக்ஜூரி டாஸ்க்கான “கோழிப்பண்ணை” டாஸ்க் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் தீவிரமாக “கோழி” மற்றும் “நரிகளாக” மாறி விளையாடுவது போல் ப்ரோமோவில் உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு ஏதேனும் போர்டுகளை போட்டியாளர்களுக்கு வழங்குவதற்கு பிக் பாஸ் “லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க்” ஒன்றை வைப்பார். வார வாரம் நடக்கும் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் முழு பலத்துடன் விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெரும் போட்டியாளருக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் இன்று நடக்கிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் பிக் பாஸ் வீடு ஒரு கோழிப்பண்ணையாக மாற்றியுள்ளது. போட்டியாளர்கள் பாதி பேர் கோழிகளாகவும், பாதி பேர் நரிகளாகவும் மாறியுள்ளனர். டாஸ்க் பற்றிய குறிப்புகளை ரியோ வாசிக்கிறார். அதன்படி, கோழிகள் தங்களின் முட்டைகளை நரிகள் கை படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நரிகள் முட்டைகளை தொட வரும் போது கோழிகள் நரிகளின் வாலை பிடித்து விட வேண்டும்.
அப்படி நரிகளின் வாலை கோழிகள் பிடித்துவிட்டால் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் தொடக்கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இப்படியாக கடைசியில் யாரிடம் அதிக கரன்சிகள் இருக்கிறதோ அவரே அந்த சுற்றின் வெற்றியாளர். அவருக்கு இறுதியில் ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும். இறுதி நாட்களுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த பவர் அதிக முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தல அஜித்தின் 50வது பிறந்தநாளில் ‘வலிமை’ ரிலீஸ்!!
இந்த டாஸ்கில் அர்ச்சனா, சோம், அனிதா மற்றும் ரியோ ஆகியோர் நரிகளாக உள்ளனர். ஆரி, பாலாஜி, ஷிவானி, ரம்யா ஆகியோர் கோழிகளாகவும் உள்ளதாக ப்ரோமோவில் தெரிகிறது. மேலும் நரியாக உள்ள அர்ச்சனா டாஸ்கில் விளையாடும் போது விழுந்து விட்டதாகவும் தெரிகிறது.