6000mAh பேட்டரியுடன் ‘மோட்டோ ஜி9 பவர்’ ஸ்மார்ட்போன் – இன்று விற்பனை தொடக்கம்!!

0

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்திய சில தினங்களில் தனது மற்றுமொரு புதிய படைப்பான மோட்டோ ஜி9 அறிமுகப்படுத்தியுள்ளது. இது இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

மோட்டோ ஜி9 பவர்

மோட்டோரோலா நிறுவனத்தில் புதிதாக சந்தைக்கு வர உள்ள மோட்டோ 9ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 15ம் தேதி மதியம் 12 மணிக்கு அதாவது இன்று தனது விற்பனையை பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் தொடக்கி உள்ளது. மோட்டோரோலா நிறுவனம் பிளிப்கார்ட்டில் மோட்டோ ஜி 5ஜி மாடலை அறிமுகம் செய்த சில தினங்களில் தனது மற்றுமொரு தயாரிப்பான மோட்டோ மோட்டோ ஜி9 பவர் மாடலை அதே பிளிப்கார்ட்டில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ரோம் கொண்ட இந்த மோட்டோ 9ஜி ஆண்டிராய்டு 10 ஆப்பிரேட்டிங் சிஸ்டம் (OS) மூலம் செயல்படுகிறது. 512ஜிபி வரை மெமரிகார்டு வசதி கொண்டுள்ளது.

பேட்டரி பொறுத்தவரை 6000mAh லித்தியம்-பாலிமர் பேட்டரி கொண்டது அதனால் 20W அதிகமாக வேகமாக சார்ஜ் செய்யப்படும். மேலும், 60மணிநேரம் வரை சார்ஜ் இருக்கும்.

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 662 ப்ரோஸ்ஸ்ஸர் மூலம் இயக்கப்படுகிறது. பின்புற கேமரா பொறுத்தவரை 64 MP முதன்மை சென்சார் + 2 MP மேக்ரோ சென்சார் + 2 MP டெப்த் சென்சார் கொண்ட 3 கேமராக்கள். முன் பக்கம் செல்பி 16MP FHD கேமரா உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!!

6.8″ மேக்ஸ் விஷன் டிஸ்பிலே உடன் எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ் வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. மேலும், 172.14 x 76.79 x 9.66 mm டைமென்ஷன்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 221கி எடை கொண்டது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் 4 ஜி எல்டிஇ ஆகியவைகளை கொண்டுள்ளது.

இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட மோட்டோ 9ஜி மாடல் ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999.  மேலும் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால் 5% கேஷ் பேக், buzz கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால் 5% தள்ளுபடி , BOB மாஸ்டர் டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால் ரூ.100 தள்ளுபடி& நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here