Wednesday, June 19, 2024

4 வது திருமணம் செய்ய ஆசை – காதல் கணவருக்கு ஒரே ஒரு நிபந்தனையுடன் வரன் தேடும் 3 மனைவிகள்!!!

Must Read

நம் நாட்டில் ஒரு பெண் கூட கிடைக்கவில்லையே என்று கவலைபடும் 90’s கிட்ஸ் இருக்க பாகிஸ்தானில் ஒருவர் 3 திருமணம் செய்துகொண்டும் நான்காவது மனைவிக்காக வரன் தேடுகிறார். அவருக்கு அவரது 3 மனைவிமார்களும் உதவி செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானை சேர்ந்தவர்:

பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள சியால்கோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் அட்னான். 22 வயதாகும் இவர் தனது 16 வது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டார். பின், 20 வயதில் ஒரு திருமணமும் அதன் தொடர்ச்சியாக 3 வது திருமணமும் நடைபெற்றுள்ளது. இவருக்கு தற்போது மூன்று மனைவிமார்களும் குழந்தைகளும் உள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் தனது மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஒரு மாதத்திற்கு மட்டும் தனது குடும்பத்திற்காக 1 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்கிறார். இப்படியாக இருக்க அவருக்கு தற்போது 4 வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றியுள்ளது. இதனை தனது மனைவிகளிடம் தெரிவித்தும் உள்ளார். இவரது இந்த ஆசையினை நிறைவேற்ற இவருக்காக வரன் தேடி வருகின்றனர் அவரது அன்பு மனைவிகள். ஒரு திருமணம் செய்தவர்களே திண்டாடும் போது இவர் எப்படி இப்படி? என்ற ஆச்சர்யம் அனைவர் மத்தியிலும் எழுகிறது.

அன்பான நிபந்தனை:

அதற்கு காரணம் இவர் 3 மனைவிகளிடமும் அன்பாக இருப்பாராம். அவர்களுக்கு என்று தனியாக நேரத்தை செலவிடுவாராம். தற்போது இவரது 4 வது திருமணத்திற்கு வரன் தேடும் மனைவிகள் ஒரு நிபந்தனையை மட்டும் வைத்துள்ளனர். அது அவரது மூன்று மனைவிகள்ளின் பெயர்கள் ஷும்பல், ஷபானா மற்றும் ஷாஹிதா ஆகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைவர்க்கும் “எஸ்” என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பது போல் வரும் 4 வது மனைவிக்கும் “எஸ்” சென்ற எழுத்தில் தான் பெயர் இருக்க வேண்டுமாம். நம் நாட்டில் ஒரு பெண் கூட இல்லையே என்று வருத்தத்தில் இருக்கும் 90’s கிட்ஸ் இந்த செய்தியினை பார்த்து கொதித்து போயுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரேக்கப் செய்த காதலி..,  ஸ்பேனரால் அடித்து குளோஸ் செய்த காதலன்.., மும்பையில் ஏற்பட்ட பரபரப்பு!!

சமீப காலமாக காதலித்து திருமணம் செய்யும் தம்பதிகள், ஏதாவது ஒரு காரணத்திற்காக காதலனை காதலி கொல்வது , காதலியை காதலன் கொல்வது போன்ற சம்பவங்கள் நடந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -