ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து அழகான உடல் அமைப்பை பெற வேண்டுமா?? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

0

உடல் எடையை குறைக்க சுலபமான சில சுலபமான வழிமுறைகள். உடல்எடை அதிகமாக உள்ளது என்பதை நினைத்து இன்று பலபேர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். உடல் எடையை குறைக்க வேண்டுமென்று நினைத்துவிட்டால் முதலில் மன தைரியம் வேண்டும். என்னால் முடியும், மற்றவர்களை போன்ற அழகான உடல் அமைப்பை பெற முடியும் என்று நம்பிக்கை வேண்டும்.

உடல் எடையை குறைக்க எளிமையான சில வழிகள்:

உடல் எடையை குறைப்பதற்கு முதலில் நிலையான முடிவு எடுக்க வேண்டும். எவ்வளவு எடையை குறைக்க வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ள வேண்டும். நினைத்த எடையை குறைக்கும் வரை உணவில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். 100 – ல், 80 சதவீதம் உணவு கட்டுப்பாடும், 20 சதவீதம் உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

 

அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் 1/2 லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்க வேண்டும். நடைப்பயிற்சியில் சிறந்தது 8 வடிவ நடைப்பயிற்சி. தினமும் அரைமணிநேரம் 8 வடிவ நடைப்பயிற்சி செய்தலே போதும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

கடைகளில் கிடைக்கும் எண்ணெய் பொருட்கள், பாக்கெட் மசாலா, அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை எடுத்துகொள்ளவும். குதிரைவாலி, வரகு, மட்டை அரிசி, ராகி, கம்பு, தினை, ரேஷன் அரிசி போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

தினமும் ஒரு அவித்த முட்டையை காலை உணவோடு அவசியம் எடுத்துகொள்ள வேண்டும். மதிய உணவில் 100 கிராம் சாதம், கீரை, இரண்டு காய்கறிகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். அவ்வாறு இருப்பது மிக மிக தவறு.

சத்தான மற்றும் கலோரி குறைவாக உள்ள உணவுகளை சாப்பிட்டு கொண்டே உடல் எடையை குறைக்க முடியும். சுரைக்காய், வெள்ளை பூசணிக்காய், சௌ சௌ காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் போன்ற அதிகமான நீர் காய்களை எடுத்ததுகொள்ள வேண்டும்.

கண்டிப்பாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். 25 கிலோ எடைக்கு 1 லிட்டர் வீதம் 75 கிலோ எடை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கும்போது தான் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள், கழிவுகள் வெளியேறும்.

 

சரியான நேரத்தில் உறங்க வேண்டும். ஒருநாளைக்கு 8 மணிநேரம் கண்டிப்பாக தூங்குவது நல்லது. அதிக நேரம் கண்விழித்து இருப்பவர்கள் மன அழுத்தம் அதிகமாகி உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அவசியமாக ஓய்வு எடுக்க வேண்டும்.

பழங்கள் தினமும் சாப்பிட வேண்டும். கொய்யா, பப்பாளி, சப்போட்டா, திராட்சை, செவ்வாழை போன்ற பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. உணவு சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அது மிக தவறு சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் அரைமணிநேரம் கழித்தே சாப்பிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here