Tuesday, May 14, 2024

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்படும் – முதல்வர் திட்டவட்டம்!!

Must Read

பல இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் வகையில் அமையப்பெறும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளான ரம்மி உள்ளிட்டவற்றை தமிழகத்தில் தடை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுகள்:

இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து அனைத்து தரப்பு இளைஞர்களும் ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி வந்தனர். பலர் இந்த விளையாட்டினால் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் இந்தியாவில் உள்ள சில மாநில அரசுகள் இந்த விளையாட்டுகளுக்கு தடை விதித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் இந்த விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று முதலமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தடைந்தார். அப்போது அவருக்கு கோவை விமான நிலையத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உற்சாகமான வரவேற்பினை அளித்தார். பின், முதல்வர் கோவை மாநகரில் மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கோரிக்கைகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின், நிருபர்களிடம் அவர் பேசும் போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக பல இளைஞர்கள் பலியாகி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு தற்போது இதனை கருத்தில் எடுத்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த விளையாட்டுகளை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும். மக்கள் அனைவரும் இதற்காக தங்களது ஒருமித்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதனை கண்டிப்பாக அரசு பரிசீலனை செய்யும்”

அரசு முடிவு:

“கூடிய விரைவில் இந்த விளையாட்டுகள் தமிழகத்தில் தடை செய்யப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து கூற வேண்டும் என்றால் அனைத்து தரப்பு பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ந்து முன்வைத்து வந்தனர். அதே போல், கொரோனா பரவலும் தற்போது தமிழகத்தில் குறைந்து உள்ளது”

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“இது போன்ற காரணங்களால் விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்படும். பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற இருக்கும் “வேல்” யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது. ஊர்வலம் நடைபெற கூடாது என்று மாநில மற்றும் மத்திய அரசுகள் தடை சட்டம் இயற்றியுள்ளன. இது போன்ற அனைத்து விவகாரங்களையும் மாநில அரசு கருத்தில் கொண்டு செயல்படும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -