பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தடையை மீறி தனது நிர்வாகிகளுடன் திருத்தணிக்கு வேல் யாத்திரை!!

0

தமிழக பா.ஜ.க. தலைவரான எல்.முருகன் தனது ஆதரவாளர்களுடன் வேல் யாத்திரைக்கு தடையை மீறி திருத்தணிக்கு சென்றுகொண்டு இருக்கிறார். தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக இந்த வேல் யாத்திரையை தொடங்க தடை விதித்தது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தடையை எதிர்த்து சென்று கொண்டு இருக்கிறார். இதன் காரணமாக திருத்தணியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

நிர்வாகிகளுடன் வேல் யாத்திரை:

ஏற்கனவே நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை வேல்யாத்திரை பா.ஜ.க தலைவரான எல்.முருகன் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தமிழக அரசு இதற்கு தடை விதித்தது. கொரோனா வீரியம் அதிகமான காரணத்தினால் இத்தடை விதிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் தடையை மீறி எல்.முருகன் அவருடன் பா.ஜ.க நிர்வாகிகளான வி.பி.துரைசாமி, எச். ராஜா, கருநகராஜன் ஆகியோரும் செல்ல உள்ளனர். இவர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே கையில் வேலுடன் இந்த யாத்திரையை தொடங்கி உள்ளார்.

முகத்திரையை கிழிக்கவே வேல்யாத்திரை:

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது, ” ஒவ்வொருவருக்கும் தனது விருப்பமான கடவுளை வழிபட உரிமை உள்ளது”. ஆதலால் எனக்கு பிடித்த கடவுள் முருகன் என்பதால் நான் எனது நிர்வாகிகளுடன் திருத்தணி செல்லவுள்ளேன் என்று கூறினார். பின்பு செய்தியாளரிடம் அவர் கடவுள் முருகனுக்கு எதிராக உள்ளவர்களின் முகத்திரையை கிழிக்கவே இந்த வேல் யாத்திரை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here