Tuesday, April 30, 2024

தேசிய அளவு ‘யுஜிசி நெட்’ தேர்வுகள் தள்ளிவைப்பு – என்டிஏ புதிய அறிவிப்பு!!

Must Read

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

நாட்டில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பல தேசிய அளவு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. தேசிய தேர்வு முகமை என்று அழைக்கப்படும் என்டிஏ ஆண்டுதோறும் கல்லூரிகளில் உதவி ஆசிரியராக பணிபுரிய தேசிய அளவு நுழைவு தேர்வினை நடத்தும்.

இந்தியாவில் 50% பேருக்கு பிப்ரவரிக்குள் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

எப்போதும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் இந்த தேர்வுகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் மற்றும் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. கல்லூரிகள் மூடி இருந்த காரணத்தாலும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் முதலில் செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது.

தேர்வுகள் தள்ளிவைப்பு:

ஆனால், இந்த தேர்வுகளை மீண்டும் என்டிஏ தள்ளிவைத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கோரிக்கையினை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

பாடவாரியாக அட்டவணை, தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேர அட்டவணை, தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் போன்ற தகவல் பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை சார்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -