Friday, May 17, 2024

நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் – பாரதிராஜா வேண்டுகோள்!!

Must Read

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா 10 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பள பணத்தில் இருந்து 30 சதவீதத்தை குறைத்துக் கொண்டு சினிமாத்துறை மீண்டு எழ உதவி புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா பரவல்:

கொரோனா பரவல் காரணமாக சினிமா துறை அதிகமாக பாதிப்பினை சந்தித்தது. தயாரிப்பாளர்கள் அதிகமான நஷ்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குனருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “என் இனிய சொந்தங்களே வணக்கம்.. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் அனைவரும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பிர்கள்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஒருவர் அஜாக்கிரதையாக இருந்தால் அது அனைவரையும் பாதிக்கும். அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாய் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்”

தென் மாவட்ட மக்களுக்காக 3 பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேத்துறை அறிவிப்பு!!

“மீண்டும் படங்கள் துவங்கப்பட வேண்டும். தமிழ் சினிமா துறை மீண்டு எழ வேண்டும். தயாரிப்பாளர்கள் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர். ஏற்கனவே பலரிடம் பணத்தினை வாங்கி தான் படம் தயாரித்து இருப்பார்கள். தற்போது பொது முடக்கம் வேறு, கூடுதலாக தற்போது கடைசி கட்ட படப்பிடிப்புகள் தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு 50 சதவீத நஷ்டம் என்பது உறுதியாகி விட்டது. இப்படி அவர்கள் கடினமான சூழலில் இருக்கும் போது நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் உதவ முன்வர வேண்டும்”

அனைவரும் உதவ முன்வர வேண்டும்:

மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் மற்ற கலைஞர்கள் அவர்களாகவே முன் வந்து தங்களது சம்பளத்தில் இருந்து 30 முதல் 50 சதவீத சம்பளத்தை குறைத்து கொள்வதாக தெரிவித்துக் கொண்டனர். தமிழ் திரை உலகில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களும் இதனை பின்பற்ற கேட்டுக் கொள்கிறேன்.

வீட்டிற்கு குடித்து விட்டு தள்ளாடியபடி வரும் மூர்த்தி – தனம் எடுக்கப்போகும் முடிவு என்ன??

இதனை அனைவரிடமும் நான் கேட்கவில்லை. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்து கொண்டு விரைவாக படத்தினை முடிக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சினிமாவையும் தயாரிப்பாளர்களையும் வாழ வைக்க அனைவரும் உதவ வேண்டும்” இவ்வாறாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024.. பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -