கருமையான உதடுகளை மூன்றே நாளில் சிவப்பாக மாற்ற வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0
pink lips tips

நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நமது உதடுகள் தான். நாம் எவ்வளவு தான் முகத்தின் அழகை பராமரித்தாலும் உதடுகள் கருமையாக இருந்தால் அழகையே கெடுத்து விடும். இப்பொழுது உதடுகளை இயற்கையாகவே சிவப்பாக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

உதடு கருமையை நீக்க..

பெரும்பாலும் ஆண்கள் சிகரெட் புகைப்பதால் உதடு கருமை ஏற்படுகிறது. பெண்களுக்கு உடலில் இருக்கும் அதிகப்படியான சூட்டால் இந்த கருமை ஏற்படுகிறது. மருத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலும் இந்த உதடு கருமை ஏற்படும். நமது உதட்டில் இறந்த செல்கள் அதிகம் தங்குவதால் இந்த கருமை ஏற்படுகிறது. பல கெமிக்கல் பொருட்களை உதடுகளுக்கு பயன்படுத்தினாலும் உதட்டில் கருமை ஏற்படுகிறது. இதனை தடுக்க நாம் முறையாக உதடுகளை பராமரித்து வர வேண்டும்.

pink lips tips

நாம் பல் துலக்கும் போது பிரஷ் வைத்து நமது உதடுகளையும் தேய்க்க வேண்டும். இதனால் உதடுகளில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் மறையும். மேலும் தினமும் கொத்தமல்லி சாறு எடுத்து உதடுகளில் தடவி வந்தால் உதடு கருமை ஏற்படாமல் தடுக்கும். சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து உதட்டில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உதட்டில் உள்ள கருமை நாளடைவில் மறையும்.

pink lips tips
pink lips tips

இப்பொழுது குறுகிய கால கட்டத்தில் உதட்டில் இருக்கும் கருமையை முழுவதுமாக நீக்க சில வழிமுறைகள் உள்ளன. முதலில் தேன் மற்றும் சர்க்கரையை கலந்து உதட்டில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதன் பிறகு உதட்டை கழுவி விட வேண்டும். இப்பொழுது உருளைக்கிழங்கு மற்றும் கற்றாழையை எடுத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை துருவி அதில் சாறை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

pink lips tips
pink lips tips

இப்பொழுது ஒரு காட்டனில் நனைத்து அதனை பிரிட்ஜில் வைக்க வேண்டும். அரைமணி நேரத்திற்கு பிறகு அதனை எடுத்து உதட்டில் வைத்து தேய்க்க வேண்டும். இதனால் உதட்டில் உள்ள கருமை முழுமையாக மறைந்து சிவப்பாகும். மற்றொரு முறையாக பீட்ரூட்டை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது பாலை சுண்ட காய்ச்சி கிரீம் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். அந்த பாலுடன் பீட்ரூட் சாறை கலந்து உதட்டில் தேய்க்க வேண்டும். இதனை 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து 3 நாட்கள் செய்தலே போதும் உதடு இயற்கையாகவே சிவப்பாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here