Friday, April 19, 2024

தென் மாவட்ட மக்களுக்காக 3 பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேத்துறை அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் உள்ள தென் மாவட்ட மக்களுக்காக ரயில்வேத்துறை சார்பில் 3 சிறப்பு ரயில்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது. மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மத்திய அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இதன் காரணமாக ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படவில்லை. பொது முடக்கம் அறிவித்து 5 மாதங்கள் ஆன நிலையில் மக்களின் தேவையினை கருத்தில் கொண்டு ரயில்கள் இயக்கப்பட்டன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

தற்போது பண்டிகை காலம் துவங்க உள்ளதால் பல சிறப்பு ரயில்கள் மக்களின் சவுகரியத்திற்காக இயக்கப்படவுள்ளன. அதிலும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. வாரந்திரமாக இரு ரயில்கள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரயில்களின் விவரம்:

மதுரை to பிகனெர்:

ரயில் எண்: 06053/06054 வாரந்திரமாக இந்த ரயில் இயக்கப்படும். அக்டோபர் 22,29 மற்றும் நவம்பர் மாதத்தில் 5,12,19,26 ஆகிய தேதிகளில் காலை 11.55 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை புறப்படும் இந்த ரயில் சனிக்கிழமை மாலை 5.45 மணி அளவில் பிகனெர் சென்றடையும்.

மறு மார்க்கமாக, பிகானேரில் இருந்து மதுரைக்கு அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1,8,15,22,29 தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு செவ்வாய் அன்று மாலை 6.40 மணி அளவில் வந்தடையும்.

ரயிலில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

பிரஸ்ட் கிளாஸ் ஏசி கோச், 4 ஏசி டூ டயர் கோச்கள், 14 ஏசி த்ரி டயர் கோச்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஜாம்நகர் to திருநெல்வேலி:

ரயில் எண்: 09578/09577. வாரந்திரமாக இந்த ரயில் இயக்கப்படும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9 மணி அளவில் ஜாம்நகரில் இருந்து புறப்பட்டு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு வந்தடையும்.

மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 5.15 மணிக்கு ஜாம்நகரை அடையும்.

ரயிலில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

ஒரு ஏசி டூ டயர் கோச்கள், 5 ஏசி த்ரி டயர் கோச்கள், 11 ஸ்லிப்பர் க்ளாஸ் கோச்கள், 4 ஜெனரல் செகண்ட் சிட்டிங் கோச்கள், ஒரு கார்டு வேன்/ சிட்டிங் கோச் ஆகியவை இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புவனேஸ்வர் to ராமேஸ்வரம்:

ரயில் எண்:08496/08495. வாரந்திரமாக இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் புவனேஸ்வரில் இருந்து அக்டோபர் 23,30 மற்றும் நவம்பர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணி அளவில் புறப்பட்டு சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் ராமேஸ்வரம் வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல் மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1,8,15,22,29 தேதிகளில் காலை 8.45 மணி அளவில் கிளம்பி மாலை 6.45 மணிக்கு புனேஸ்வர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -