தமிழ் திரையுலகில் பல நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் ரைசா வில்சன் தற்போது நீச்சல் குளத்தில் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரைசா வில்சன்
மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்த ரைசா வில்சனுக்கு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். மேக்கப் போடுவதில் ஆர்வம் அதிகமுள்ள ரைசா பிக் பாஸ் வீட்டிலும் மேக்கப் போட்டுகொண்டு தான் தான் இருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் நமிதாவிற்கும் இவருக்கும் இடையே நட்பு உருவானது. மேலும் இவரால் சில பிரச்சனைகளும் உருவானது. பிக் பாஸ் வீட்டில் தூங்கிக்கொண்டே இருக்கும் ரைசா கமலஹாசனிடன் இதற்காக திட்டும் வாங்கியுள்ளார். அதன் பின் வைல்ட்கார்டு என்ட்ரி கொடுத்த ஹரிஷ்க்கும் இவருக்கும் இடையே நட்பு உருவானது.
பிக் பாஸ் வீட்டில் ஹரிஷ் கல்யாண் உடன் கிசுகிசுக்கப்பட்டர். மேலும் ஹரிஷ் மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும் நேரடியாகவே கூறியுள்ளார் ரைசா. பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரைசாவிற்கு பல ரசிகர்கள் இருந்தனர். மேலும் அவருக்கு ஹரிஷ் கல்யாண் உடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இருவரும் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரைசாவும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படத்தில் இருவரது கெமிஸ்ட்ரியும் ஒத்து போக படம் சூப்பர் ஹிட் ஆனது. தனது முதல் படத்திலேயே அவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தன.
லாக்டவுன் காரணமாக தற்போது அவரது படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா பல தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது நீச்சல் குளத்தில் அமர்ந்து படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.