சுவையான ‘முந்திரி சிக்கன்’ ரெசிபி – ஈசியா வீட்டிலேயே செய்வது எப்படி??

0
chicken
chicken

சிக்கனில் அதிக புரத சத்துக்கள் உள்ளதால் நமது தசைகளை வலுப்பெற செய்கிறது. மேலும் இதில் வைட்டமின் பி உள்ளதால் கண்புரை பிரச்சனை, நீரிழிவு நோய் போன்றவற்றை போக்குகிறது. மேலும் செரிமானத்தை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கனும் ஒன்று. இப்பொழுது இந்த சிக்கனை வைத்து முந்திரி சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

tandoori-chicken-ingredients
tandoori-chicken-ingredients

சிக்கன்

பெரிய வெங்காயம் – 2

முந்திரி – 50 கி

தயிர்

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 1 தேக்கரண்டி

இஞ்சிபூண்டு விழுது – 2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் – 2

எலுமிச்சை சாறு

கொத்தமல்லி

பட்டை

கிராம்பு

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் அதில் முந்திரியை சேர்த்து வதக்கவும். இப்பொழுது இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன்பின் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து கழுவி ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும்.

chicken
chicken

இப்பொழுது அந்த சிக்கனில் தயிர், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். இப்பொழுது அந்த பௌலில் நடுவில் சிறிய கிண்ணத்தை வைத்து அதில் சூடான அடுப்புக்கரியை வைத்து அதில் வெண்ணெய் ஊற்றினால் புகையாக வரும் இப்பொழுது அதனை வெளியேறாமல் அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

cashew chicken
cashew chicken

இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு பிரியாணி இல்லை சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காயம், முந்திரி கலவையை சேர்த்து அடிபிடிக்காமல் வதக்க வேண்டும். வதங்கியதும் அதில் சிக்கனை சேர்த்து வதக்கி உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்பொழுது மூடி போட்டு மூடி 15 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான முந்திரி சிக்கன் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here