ஒரே மாதத்தில் முடி உதிர்வை தடுக்க வேண்டுமா?? எளிமையான இயற்கை மருத்துவம்!!

0

தலையில் முடி உதிர்வு பிரச்சனைகள் இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு அதிகம் உள்ளது. தலையை வாரும் போதெல்லாம் கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன. இதற்கு மாறி வரும் பழக்க வழக்கங்களே காரணம். மேலும் தலை முடியை சரிவர பராமரிக்காமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது.

முடி உதிர்வை தடுக்க??

இந்த முடி உதிர்வு இளம் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் நாம் கண்ட பொருட்களை வாங்கி உபயோகித்து மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். உடல் சூடும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் இரவில் உறக்கமின்மை, அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். இப்பொழுது இயற்கை முறையில் முடியை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

  • தலை முடிக்கு ஷாம்பூ பயன்படுத்துவதை விட சாதம் வடித்த நீரில் சிகைக்காய் தூளை கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி அடர்த்தியாகவும் ஊட்டசத்துடன் வளரும்.
  • மேலும் நாம் சாப்பிடும் உணவுகளில் நெல்லிக்காய், கருவேப்பிலை, முளை கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
hair oil ingredients
hair oil ingredients
  • செம்பருத்தி இலையை சாறு எடுத்து முடியின் வேர் பகுதியில் தேய்த்து வர முடிக்கு ஊட்டமளித்து வளர்ச்சியை தூண்டும். மேலும் ஆலிவ் எண்ணெயை கொஞ்சமாக சூடாக்கி ஆறியதும் தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிர்வும் குறையும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

  • தாமரை இலையை சாறு எடுத்து நல்லெண்ணெய் உடன் சேர்த்து சூடாக்கி அந்த தைலத்தை முடி இல்லாத இடத்தில் மசாஜ் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
  • வேப்பிலையை எடுத்து அதனை நீரில் கொதிக்க வைத்து ஆறியதும் தலை முடியை அலசினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் கொத்தமல்லி சாறை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தால் முடி உதிர்தல் குறைந்து முடியின் வேர் வலுப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here