Friday, May 17, 2024

தவறை தவிர்த்து இருக்கலாம்..,அனுபவமே பாடம் – சொத்து வரியினை செலுத்தினார் ரஜினிகாந்த்!!

Must Read

சொத்துக்கான வரியினை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்ததை அடுத்து ரஜினிகாந்த் வழக்கினை திரும்பப்பெற்று தற்போது வரியினை மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளார்.

மாநகராட்சி நோட்டீஸ்:

சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தாமாக “ராகவேந்த்ரா திருமண மண்டபம்” உள்ளது. இந்த மண்டபத்திற்கான சொத்து வாரியாக சென்னை மாநகராட்சி அவருக்கு ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை விதித்து இருந்தது. நோட்டீஸ் பெறப்பட்டதை அடுத்து ரஜினிகாந்த தரப்பில் கூறப்பட்டதாவது “கடந்த 6 மாதங்களாக கொரோனா பொது முடக்கம் காரணமாக மண்டபத்தை வாடகைக்கு விட முடியாமல் இருந்தது”

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

“மண்டபம் காலியாக இருந்ததால் வருமானம் கிடைக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு சொத்துக்கான வரியினை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அவர் கூறியதாவது, “நோட்டீஸ் அனுப்பப்பட்டு 10 நாட்கள் கூட ஆகவில்லை”

அனுபவமே பாடம்:

“அதற்குள்ளாக வழக்கு தொடர்ந்து எதற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?? அதே போல் வழக்கினை அதிகமான அபாரதத்துடன் தள்ளுபடி செய்யவும் உத்தரவிடுவேன்” என்று கூறியிருந்தார். அதனால் ரஜினிகாந்த தரப்பில் இருந்து வழக்கு திரும்ப பெறப்பட்டது.

கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இன்று சொத்துக்கான வரியினையும் செலுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சியிடமே மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும். தவறை தவிர்த்து இருக்கலாம். அனுபவமே பாடம்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -