Monday, May 20, 2024

முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வி அமைச்சர் தகவல்!!

Must Read

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டபடிப்புகளுக்கு மாணவர்கள் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் நடப்பு கல்வி ஆண்டு துவங்கி நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் கல்லூரிகள் திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இப்படியாக இருக்க இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பாடங்களை ஆன்லைன் வாயிலாக படித்து வருகின்றனர். கல்லூரிகளை திறக்க கூடிய சூழல் இல்லாததால் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. தற்போது முதலாமாண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்று கொண்டு வருகின்றனர்.

புதிய அறிவிப்பு:

தற்போது கலை மற்றும் அறிவியல் முதுநிலை பட்ட படிப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். நாளை முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை இந்த பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டபடிப்பிற்கான பொது தேர்வினை ரத்து செய்ய முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!

விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasapg.in, www.tngasapg.org இந்த இரு இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது சான்றிதல்களை பதிவேற்றுதல் அவசியம். சான்றிதழ்களை அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம்

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் https://www.youtube.com/watch?v=AW56e1N7TMc  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -