Saturday, May 4, 2024

ஹத்ராஸ் சம்பவத்தில் முதல்வர் ஆதித்யநாத் அதிரடி – காவல்துறை அதிகாரிகள் “சஸ்பெண்ட்”!!

Must Read

நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்த ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் காவல்துறை உயரதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். பாதிக்கப்பட்ட மனிஷாவின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம்:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷா என்ற தலித் இனத்தை சேர்ந்த பெண்ணை இவர் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது 4 இளைஞர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதற்காக அவரது நாக்கினை துண்டித்துள்ளனர். அதே போல் அவரது கழுத்து, முதுகு தண்டுவடம் போன்ற பகுதிகளை பலமாக காயப்படுத்தி உள்ளனர்.

6 மாதங்களில் உயரமாக வளர வேண்டுமா?? எளிய வழிமுறைகள் இதோ!!

இந்த சம்பவம் நாட்டு மக்களை பெரிதும் கொந்தளிப்பு அடைய வைத்தது. பாதிக்கப்பட்ட மனிஷா கடந்த 29 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இவர் மரணம் அடைந்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அவரது உடலை வலுக்கட்டாயமாக நள்ளிரவு 2.30 மணி அளவில் தகனம் செய்தனர். மனிஷா குடும்பத்தினர் போலீசார் வலுக்கட்டாயமாக உடலை தகனம் செய்ததாக குற்றம் சாட்டினர்.

முதல்வர் அதிரடி:

இதனை அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெண்ணின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்ததுடன் நிவாரண நிதியும் வழங்கி உள்ளார். கூடுதலாக இந்த வழக்கினை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவையும் அமைத்தார். இந்த விசாரணை குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறிருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி., போலீஸ் துணை கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -