Saturday, May 18, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள் – சில வரிகளில்!!

Must Read

தேசிய செய்திகள்:
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,121 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,00,194 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா இறப்புகளின் அடிப்படையில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று கூறிய பாஜக தலைவர் அனுபம் ஹஸ்ராவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய பாஜக தேசிய செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மாநில செய்திகள்:
  • கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வேலையின்மை பிரச்சனையை சரிசெய்யும் பொருட்டு 95,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை கேரளாவில் கொண்டு வரப்பட்டு உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.
  • தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த ஆகிய இருவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவ நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.
  • கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த குரூப் 1 தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலை பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி தேர்வுகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்:
  • சென்னையில் தங்க விலை சவரனுக்கு ரூ.38,520 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிராம் ஒன்றிற்கு 22 ரூபாய் அதிகரித்து ரூ.4,837 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்க விலை உயர்வது அனைத்து தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
  • ஒவ்வொரு மாதமும் விலை நிலவரம் மாற்றப்படுவதை அடுத்து சிலிண்டர் விலை சர்வதேச சந்தை நிலவரத்தை ஒட்டி ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.610 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வணிக சிலிண்டர் 26 ரூபாய் உயர்ந்து 1,276 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி செய்திகள்:
  • நாடு முழுவதும் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. புதுவை அரசு 5 ஆம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.
  • தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசியல் செய்திகள்:
  • தமிழகத்தில் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கட்சி தலைமையகம் சார்பில் அனைத்து எம்எல்ஏ.,கள் சென்னைக்கு வரும் 6 ஆம் தேதி வர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
  • கொரோனா பொது முடக்க கால விதிகளை மீறி நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கால விதிகளை மீறியதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வானிலை ரிப்போர்ட்:
  • அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
  • அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் தற்போதைய அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளரும் ஆன டொனால்ட் டிரம்ப்பிற்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்தியாவின் உயர்ந்த பதவிகளாக கருதப்படும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சி 6 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வருமானத்தை பெருக்குவதற்காக ரயில்வேதுறை ஒரு புதிய இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -