Saturday, May 4, 2024

முதன்மை தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது – யு.பி.எஸ்.சி திட்டவட்டம்!!

Must Read

அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய மனுவிற்கு யு.பி.எஸ்.சி திட்டவட்டமாக தனது மறுப்பினை தெரிவித்துள்ளது.

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வுகள்:

ஆண்டுதோறும் யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு தேர்வாணையம் இந்தியாவின் உயர்பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான 24 தேர்வுகளை நடத்தும். இந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்து இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், கொரோனா பொது முடக்கம் காரணமாக தேர்வுகள் நடத்த முடியாமல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், வெள்ளம் காரணமாகவும் பலர் தேர்வுகளை எழுத முடியாத சூழல் ஏற்பட்டதால், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 20 பேர் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை கொடுத்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் யு.பி.எஸ்.சி தனது பதிலை பிராமண பத்திரமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி இன்று யு.பி.எஸ்.சி பிராமண பத்திரத்தை சமர்ப்பித்தது. அதில் தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சமர்ப்பித்த பிராமணபத்திரம்:

இன்று யு.பி.எஸ்.சி சமர்ப்பித்த பிராமண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது “கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்கனவே தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வுகளை ஒத்திவைத்தால் அரசின் முக்கிய பணியிடங்களில் அதிகாரிகளை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும். தேர்வு முடிவுகள் வெளியாவதில் சுணக்கம் ஏற்படும்.”

தமிழகம், கேரளா இடையே 7 சிறப்பு ரயில்கள் இயங்கும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!!

“அதே போல் தற்போது தேர்வுகளுக்கு 60 சதவீதம் பேர் தங்களது ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் நீட் மற்றும் ஜே.இ.இ தேசியளவு தேர்வுகள் நடைபெற்றது போல் யு.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற அனுமதி அளிக்கப்பட வேண்டும்” இவ்வாறாக  தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -